தொடர் மின்வெட்டு காரணமாக சில பகுதிகளில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் சமிக்ஞை கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்சாரம் தடைப்படும் போது ஜெனரேட்டர்களுக்கு டீசல் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படாமல் இருப்பதுடன், அந்தந்தப் பகுதிகளில் இணைய சேவையைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் டீசல் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.