கடந்த 2021ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், பிரித்தானிய பொருளாதாரம் 1.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.0 சதவீத வளர்ச்சியடைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் பொருளாதார புள்ளிவிபர இயக்குனர் டேரன் மோர்கன் கூறுகையில்,
‘நான்காவது காலாண்டில் நாங்கள் முதலில் நினைத்ததை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி சற்று வலுவாக வளர்ந்தது. அதாவது இப்போது அதன் தொற்றுநோய்க்கு முந்தைய மட்டத்திற்கு கீழே 0.1 சதவீதம் மட்டுமே உள்ளது’ என கூறினார்.
பிரித்தானிய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது. சமீபத்திய தேசிய புள்ளியியல் அலுவலக மதிப்பீடுகளின்படி, அழிவுகரமான 2020ஆம் ஆண்டிலிருந்து ஒரு சாதனை மீள் எழுச்சியில், 7.5 சதவீத ஆரம்ப மதிப்பீட்டைத் தவறவிட்டது.
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் இந்தச் செய்தி வந்துள்ளது.