நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதன்படி, A முதல் F வரையான வலயங்களில் காலை 8மணிமுதல், நண்பகல் 12மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
G முதல் L வரையான வலயங்களில் மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P Q R S வரையான வலயங்களில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.