இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.