கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளின், குழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
22ஆவது கால்பந்து உலகக்கிண்ண தொடரில் விளையாடும் 32 அணிகளில் 29 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், லீக் சுற்றில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்றது.
இதன்போது, தற்போதுவரை தேர்வாகியுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
இதில் ஏ பிரிவில் கட்டார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, தகுதிச்சுற்று அணி, சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து, டி பிரிவில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, தகுதிச்சுற்று அணி.
இ பிரிவில் முன்னாள் சம்பியன்கள் ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் ஜப்பான், தகுதிச்சுற்று அணி, எஃப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிஸ்லாந்து, கேமரூன், எச் பிரிவில் போர்துகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
மீதமுள்ள மூன்று அணிகள் யார் என்பது, பிளே ஒஃப்களின் வெற்றியாளர்கள், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உறுதி செய்யப்படுவார்கள்.
தொடரின் ஆரம்ப போட்டியில், உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் கட்டார் அணியும் ஈக்வடார் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
22ஆவது கால்பந்து உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 18ஆம் திகதி வரை கட்டாரில் எட்டு மைதானங்களில் நடைபெறுகிறது.