நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார் .
மேலும் டொலர் நெருக்கடிக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்வு காணப்படாவிடின், அரச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை உருவாகுவதோடு மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார் .
இதே வேளை ‘புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடதக்கது .