நாட்டில் இன்றைய தினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை நேற்று கோரிக்கை விடுத்தது. எனினும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.
இந்த நிலையிலேயே, 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு குறித்த கால அட்டவணை..
https://drive.google.com/file/d/129YE73WN_zWZITBNjv8ZbufpNrcX4llq/view