ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசசேட கூட்டமொன்று நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து எவ்வித இறுதி தீர்மானங்களும் நேற்று எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே, இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் மீண்டும் கூடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.