மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.
அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.