இலங்கை விவகாரங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள்கூட தலையிடத் தொடங்கியுள்ளன என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தினர் என்றும் எனினும் அவர்கள் வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறிவிட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல்களை நிரூபித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களை மறைத்து வருகின்றதென்றும் எனவே இலங்கைக்கு சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
இலங்கை விவகாரங்களில் தலையிடுவதற்கு அண்டை நாடுகளில் உள்ள சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொள்வதைக்கூட நாங்கள் காண்கிறோம் என்றும் எனினும் இந்த நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்பது சாத்தியம் என்றும் அவர் மேலும் கூறினார்.