பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் உள்ளிட்டவை இலகுவாக பெற்றுக்கொள்வதில் அசௌகரியமான நிலைமைகள் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினை காண வேண்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுகமாகப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. ஆந்த விடயத்திற்கே முதற்தானம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.
என்னைப்பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கு கிடையாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.