கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இன்னமும் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 இலட்சம் பேர் கிடையாது எனத் தெரிவித்த அவர், 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசு அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும், கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.