இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபாயாகவும் லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.