காலி – கொக்கலை ஆடைத்தொழிற்சாலையில் உணவு நஞ்சானமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என தெரிவித்த ஊழியர்கள் இன்று காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















