எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்கூறியிருந்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நிலையில் தான் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ள சபாநாயகர். அவரின் கருத்து முற்றாக நிராகரித்துள்ளார்.
இருப்பினும் சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூறியது உண்மையே என அடித்துக் கூறிய சஜித் பிரேமதாச, இதற்கு கால அவகாசம் வழங்குமாறும் தான் பதிலளித்ததாக கூறியுள்ளார்.
அத்தோடு சபாநாயகர் குறித்த கருத்தை வெளியிடும்போது அவை முதல்வர் தினேஷ் குணவர்தனவும் அருகில் இருந்தார் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அத்தோடு சபாநாயகர் அவ்வாறு கூறவில்லை என்பதை மறுக்குமாறு தினேஷ் குணவர்தனவிற்கு அழைப்பு விடுத்தபோதும் சபையில் அவர் அமைதிகாத்தார்.