கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் மொத்தம் 470 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
தீ வைப்பு மற்றும் குற்றச் சேதம், கொள்ளை, ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் அறிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான திருட்டுகளும் அவற்றில் அடங்கும்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 1 சதவீதத்துக்கும் குறைவான குற்றங்கள் யாரோ ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, எச்சரிக்கை அல்லது அபராதம் விதிக்கப்பட்டன. மேலும் 400க்கும் மேற்பட்ட குற்றங்களில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.
இளவரசர் ஹரி தனது குடும்பத்தை அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்குகு அழைத்து வருவது குறித்து பாதுகாப்பு அச்சம் தெரிவித்ததை அடுத்து, அவர் வருகையின் போது ‘பாதுகாப்பாக உணரவில்லை’ என்று கூறி பொலிஸ் பாதுகாப்புக்காக பணம் செலுத்த முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து யார்டில் அரச பாதுகாப்பின் முன்னாள் தலைவரான டேய் டேவிஸ், குற்றங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மற்றும் பயமுறுத்தும் எண்ணிக்கை என்று கூறினார்.