நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது.
விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலமாக நேற்று சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட திருத்தங்களில் பெரும்பாலானவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கடமைகளை அமைச்சரவைக்கு மாற்றும் என கூறியுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த கடமைகள் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் 20வது திருத்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் மீண்டும் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யும் வகையிலும் முன்மொழிவு அமைந்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் 21வது திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.