ஆண்களுக்கான செர்பியா பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வும் இத்தாலியின் பெபியோ போக்னிநியும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முதல் காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், ஜப்பானின் டரோ டேனியலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஹென்ரி ரூபெல்வ், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
——————————————————————————————————————————————————————————–
இரண்டாவது காலிறுதிப் போட்டியில், இத்தாலியின் பெபியோ போக்னிநியும் ஜேர்மனியின் ஒஸ்கார் ஓட்டேவும் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.