நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்த தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் என, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நிதியமைச்சர் அலி சப்ரி நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நட்பு நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கூறினார்.
தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.