உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 71 சதவீதம் 44 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்தே வந்துள்ளது.
இதில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி போர் தொடங்கியது முதல் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கிய ஐரோப்பிய நாடாக ஜேர்மனி விளங்குகின்றது.
கடந்த இரண்டு மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு ஜேர்மனி இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ஜேர்மனி தனது இயற்கை எரிவாயு தேவையில் 35 சதவீதம் ரஷ்யாவிடமிருந்தே கொள்முதல் செய்கிறது.
அதேபோல போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்த இரண்டாவது நாடு இத்தாலி என தெரியவந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து 6.9 பில்லியன் யூரோ மதிப்பிலான எரிபொருளை இத்தாலி கொள்முதல் செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் சீனா கடந்த 2 மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து 6.7 பில்லியன் யூரோ மதிப்பிற்கு எரிவாயு, கச்சா என்ணெய் வாங்கியுள்ளது.