மொஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் கட்டுப்பாட்டிற்கு திரும்புவது “சாத்தியமற்றது” என அறிவித்துள்ள புதிய அரசாங்கம் ரஷ்ய ரூபிள் நாணய மாற்றத்தையும் அறிவித்துள்ளது.
கெர்சனில் நீண்ட காலத்திற்கு வலுவான அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை செலுத்துவதற்கான ரஷ்ய நோக்கத்தை குறிப்பதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
கெர்சன் மற்றும் அதன் போக்குவரத்து இணைப்புகள் மீதான நீடித்த கட்டுப்பாடு, வடக்கு மற்றும் மேற்கு நோக்கி முன்னேறும் ரஷ்யாவின் திறனை அதிகரிக்கும்.
அத்தோடு கிரிமியா மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் என பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.