கொவிட் துணை ரகங்கள் புதிய நோய்த்தொற்று அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் வகை கொரோனாவின் இரு துணை ரகங்களால், கொரோனாவுக்கு எதிராக ஏற்கெனவே உடலில் உருவாகியுள்ள எதிர்ப்பாற்றலை அழிக்கமுடியும் என்பதால் இந்த ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பிஏ.4, பிஏ.5 ஆகிய அந்த இரு துணை ரகங்களால் பாதிக்கப்பட்ட 39 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் 15 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த இரு துணை ரகங்களும் கண்காணிக்கப்பட வேண்டிய கொரோனாக்கள் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.