ஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய படகுக் கடப்புகளின் மொத்த எண்ணிக்கையை குறைந்தபட்சம் 6,693ஆகக் கொண்டு வந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 2,004 எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும், மேலும் 2020ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1,006 எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டு 28,00 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். அவர்களில் 37பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, மேலும் 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000ஆக இருக்கும் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.