யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திக்க நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.