வட கொரியா தனது அணுசக்தி திறன்களை வேகமாக மேம்படுத்துவதாக கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, புதிய ஏவுகணை சோதனையொன்றை நடத்தியுள்ளது.
பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து நேற்று (புதன்கிழமை) மதியம் 12:03 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக சியோலின் கூட்டுப் பணியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கடலோர காவல்படையும் ஏவுகணை ஏவப்பட்டதாக அறிவித்தது மற்றும் இது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று கூறியது.
இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 கிலோமீட்டர் தூரம் பறந்ததாக சியோலின் கூட்டுப் பணியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஏவுதல் இந்த ஆண்டு வடக்கின் 14ஆவது ஆயுத சோதனையாகும். மேலும் தென் கொரியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழமைவாதி ஜனாதிபதி யூன் சுக்-யோல், பதவியேற்பதற்கு ஒரு வாரத்திற்குள் இந்த சோதனை வந்துள்ளது.
பியோங்யாங் கடந்த மாதம் 2017ஆம் ஆண்டிலிருந்து அதன் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.