நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.