கியூபாவின் ஹவானாவில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், குறைந்தது 22பேர் உயிரிழந்துள்ளதோடு 64பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஹோட்டல் சரடோகாவில் ஏற்பட்ட வெடிப்புக்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
முதற்கட்ட தரவுகளின்படி, இறந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 சிறார்கள் உட்பட 64பேர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
சிலர், அழிக்கப்பட்ட ஹோட்டலின் அடித்தளத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கியூபா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆகையால் அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டுவிட்டரில் ஜனாதிபதி அலுவலகம் பகிர்ந்துள்ள படங்களின்படி, கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் வெள்ளிக்கிழமை வெடிப்பு நடந்த இடத்தையும், ஹெர்மனோஸ் அமீஜெராஸ் மருத்துவமனையையும் பார்வையிட்டார்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குத் திரும்பிய பிறகு, வெடிப்பு வெடிகுண்டு அல்ல, இது ஒரு வருந்தத்தக்க விபத்து என்று அவர் கூறினார்.
காயமடைந்த அனைவருக்கும் மருத்துவமனைகள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.