பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 500 இடங்களை இழந்து 11 சபைகளின் கட்டுப்பாட்டை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியினர் இழந்துள்ளனர்.
லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய சபைகள் உட்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அந்த இடங்களைக் கைப்பற்றியது.
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் எஸ்.என்.பி. அதிக இடங்களைப் பெற்றது. வடக்கு அயர்லாந்து சட்டமன்றத்தில் சின் ஃபைன் அதிக இடங்களை வெல்லும் பாதையில் உள்ளது. மேலும் முடிவுகள் சனிக்கிழமை வர உள்ளன.