காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயம்!
போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
UPDATE – தொடரும் போராட்டம்: காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு!
காலிமுகத்திடலில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் வேண்டுமென்றே போராட்டக்காரர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர் – அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர்
பொலிஸார் வேண்டுமென்றே போராட்டக்காரர்களை உள்ளே செல்ல அனுமதித்ததாக அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 17 பேர் காயம்!
போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்ப காலிமுகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்
போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலவரத்திற்கு நடுவிலும் கோட்டாவிற்கு எதிராக கோசமிடும் போராட்டக்காரர்கள்!
போராட்டக்ளத்திற்கு ஜேவிபி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.
அத்தோடு, கலவரத்திற்கு நடுவிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகின்றனர்.
UPDATE – மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் – 9 பேர் காயம்!
மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கோட்டா கோ ஹோம் என கோசமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ஆதரவாளர்களால் கோட்டா கோ கமவிலும் கூடாரங்கள் தகர்ப்பு – போர்க்களமாக மாறும் கொழும்பு!
மஹிந்த ஆதரவாளர்களால் கோட்டா கோ கமவிலும் கூடாரங்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
பொலிஸாரின் தடைகளை மீறி கோட்டா கோ கமவிற்குச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள்!
பொலிஸாரின் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி மஹிந்த ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர்.
காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தம்!
காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கலகம் அடக்கும் பொலிஸாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என தெரிவித்த நிலையில், தற்போது காலிமுகத்திடலை நோக்கிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.