பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டாரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் இயல்புநிலை திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பாரென்றும் பின்னர் அவர் விரும்பும் இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்படுவாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.