ரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார்.
விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிரிகள் நயவஞ்சகமானவர்கள் என்றும் அவர்களால் முடிந்தவரை பல உக்ரேனியர்களை காயப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்கிறனர் என்றும் கூறியுள்ளார்.
கார்கிவ் அருகே உள்ள சில நகரங்களை தங்கள் துருப்புக்கள் மீட்டெடுத்துள்ளன என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கார்கிவ் பகுதில் பல இடங்கள் தீப்பற்றி எரிவதாகவும் அப்பகுதியில் கடுமையான போர்கள் நடந்து வருவதாக கஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்தார்.
உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தீவிர ஷெல் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றது.