நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு இரண்டு வாரங்களுக்குள் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவி விலகினால் நாளை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தான் தயாராக உள்ளேன் என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக உள்ளளேன் என்றும் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.