ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது நாட்டுக்கான நலனாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரேனும் இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.