புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமொன்று அமையாது என்பதோடு தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை “அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என நம்புகிறோம் என்பதோடு இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் அந்நிய கையிருப்பு வரலாற்றில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளது, அதேவேளையில் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் தவிக்கின்றனர். ஆகையால் இந்த நெருக்கடியைத் தீர்த்து, மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியது இன்றியமையாதது” என்றும் ருவான் விஜேவர்தன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ராஜபக்சக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .