பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் அவர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.