கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.
பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதால், குடும்பப் பணம் அனுப்பும் வரம்பு, அமெரிக்காவில் குடியேறியவர்கள் கியூபாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் நிதி அகற்றப்படும். முன்னர் புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அனுப்புவது தடுக்கப்பட்டது.
புதிய திட்டங்களின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான நன்கொடைகளும் அனுமதிக்கப்படும்.
ஆனால், அமெரிக்க அதிகாரிகள், சிவிலியன் எலக்ட்ரானிக் பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தி மனித உரிமை மீறல்களை செய்பவர்களை சென்றடையாமல் இருப்பதை உறுதி செய்ய முயல்வதாக வலியுறுத்தியுள்ளனர்.
பைடன் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கியூபாவிற்கு அதிக பட்டய மற்றும் வணிக விமானங்கள் கிடைக்கும், தீவில் அமெரிக்க தூதரக சேவைகள் விரிவுபடுத்தப்படும் மற்றும் குடும்ப மறு இணைப்பு திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும்’ என்று கூறினார்.
கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், இந்த அறிவிப்பை வரவேற்றார் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியான திசையில் ஒரு சிறிய படி என்பதைக் குறிக்கிறது எனக் கூறினார்.
ஆனால், 1962ஆம் ஆண்டிலிருந்து தடையை மாற்றியமைக்கவில்லை என கூறிய அவர், கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையின் குறிக்கோள்களோ அல்லது தோல்வியுற்ற முக்கிய கருவிகளோ மாறவில்லை என குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சியில் பதற்றம் தணிந்த பின்னர், 2017ஆம் ஆண்டு கியூபா அரசாங்கத்தின் மீது பல தடைகளை ட்ரம்ப் அறிவித்தார்.
அவரது நிர்வாகம் விசா செயலாக்கத்தை குறைத்தது, பணம் அனுப்புவதை கட்டுப்படுத்தியது மற்றும் குடும்ப வருகைகள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கியூபாவிற்கு செல்ல விரும்பும் அமெரிக்க குடிமக்களுக்கு தடைகளை அதிகரித்தது.