இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு டேசர்களைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவிப்பை உட்துறைச் செயலாளர் ப்ரீத்தி படேல், ஒரு உரையில் பொலிஸ்துறையிடம் அறிவிப்பார் என அறியமுடிகின்றது.
சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பயிற்சியை முடித்தால் அவர்கள் மின்சார ஸ்டன் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
தாக்குபவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் பாதகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உட்துறை அலுவலகம் கூறியது.
ஆனால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதை அவர்களின் பயன்பாட்டில் ஆபத்தான விரிவாக்கம் என்று அழைத்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 8,900 தன்னார்வ அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் ஊதியம் பெறும் அதிகாரிகளின் அதே அதிகாரங்களையும் சீருடைகளையும் கொண்டுள்ளனர்.