அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் நாளை பணிக்கு திரும்புவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தது போன்று நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.