நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறி விளைச்சல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை கூட்டுப் பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.