இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதி அலங்கா சிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மருந்து நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார்.