ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழ்மையான ஃபாவேலா சமூகத்தில் பிரேசில் காவல்துறை நடத்திய சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவர்களை பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட விலா க்ரூஸீரோ ஃபாவேலாவில் செவ்வாய்கிழமை அதிகாலை சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் 10 கும்பல் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று நடந்த சோதனையானது ரியோ டி ஜெனிரோ ஃபாவேலாவில் நடந்த சமீபத்திய ஆபத்தான பொலிஸ் நடவடிக்கை என விமர்சனம் வெளியாகியுள்ளது.