வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு பயணத்தைத் தொடர்ந்து, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறைந்தது இரண்டு ஏவுதல்கள் நடந்ததாக ஜப்பான் உறுதிப்படுத்தியது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டது.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி கூறுகையில், ‘முதல் ஏவுகணை சுமார் 300 கிமீ (186 மைல்கள்) அதிகபட்சமாக 550 கிமீ உயரத்தில் பறந்தது, இரண்டாவது, 50 கிமீ உயரத்தை எட்டியது, இது 750 கிமீ வரை பயணித்தது’ என கூறினார்.