பாகிஸ்தான் ஜெனரல்கள் புதிய இராணுவ தளபதியை நியமிப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அண்மைய மாதங்களில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் பல்வேறு தரப்புக்களினாலும் விடுக்கப்படுகின்றன.
குறிப்பாக இராணுவ ஜெனரல்கள் நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால் மீண்டும் அடுத்த இராணுவ தளபதியை நியமித்து மீண்டும் தமது கையை ஓங்கச் செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.
தேர்தலை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபந்து அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசியல் மற்றும் நிதித் தலைவரை தெரிவு செய்வதற்கான பேச்சுக்களில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக ‘இஸ்லாம் கபார்’ என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர்கள் ஹபீஸ் ஷேக் மற்றும் ஷெளகத் தாரின், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ராஜா பகீர் ஆகியோர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஜெனரல்களால் அழைக்கப்பட்டனர்.
அதன்போது ஜெனரல்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை முறிக்க விரும்பவில்லை என்பதோடு அவசர உதவிகளைப் பெறுவதற்கு ஐக்கிய அணுகுமுறையை வலியுறுத்தினர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 25ஆம் திகதி இஸ்லாமாபாத் நீண்ட நடைப்பேரணியை நடத்தியுள்ளதார். புதிய தேர்தல் திகதி மற்றும் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதற்கு பதிலடியாக, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், ஷிரீன் மசாரி போன்ற இம்ரான் கானுக்கு ஆதரவாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது.
ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கத்துக்கு நாடு எதிர்கொள்ளும் பணவீக்கம் மற்றும் கடன்கள் போன்ற உடனடி சவால்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை அமைப்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. லண்டனில் மூத்த சகோதரர் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் உள்ள நொண்டி குதிரையை தன்பக்கமாக்குவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளார்.
இத்தகைய நிலைமைகளில் பொருளாதார நெருக்கடிகள் அடுத்து வரும் காலத்தில் மிகவும் மோசமடைந்து இலங்கையின் நிலையை அடையும் என்று ஜெனரல்கள் கவலையடைந்துள்ளனர்.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கில், ஏற்கனவே வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெருக்கடிகள் அதிகரிக்கும் போது மேலும் மக்கள் வீதிக்கு இறங்கினால் அது உள்நாட்டுப் போராக மாறக்கூடும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன.