பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் அரசு நிறுவனங்களை விமர்சித்ததாகக் கூறப்படும் தேசத்துரோக வழக்குகளின் கீழும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஊடகவியலாளர்கள் பொதுவாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கான் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்ததோடு அதனை ‘அரசியல் பழிவாங்கல்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையகம் தொலைக்காட்சிகளை ‘ஏளனம் செய்யும’ உள்ளடக்கத்தை ஒளிபரப்பக் கூடாது என்று எதிராக எச்சரித்தது.
குறிப்பாக நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் பரிசீலனையில் உள்ள நபர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடைநிறுத்துதல் மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ஃபெடரல் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் நாட்டில் ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் ‘கறுப்புச் சட்டங்களை’ திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் முழுமையான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. ஊடகப் பங்குதாரர்களுடன் அரசாங்கம் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்க வேண்டும் என்று அமைப்பு மேலும் கூறியது.