முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று (புதன்கிகழமை) மாலை அவரிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.