உக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது.
உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு இது போன்ற பொருட்கள் பங்களிக்காது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
இதனிடையே தனித்தனியாக, ஜேர்மனி அரசாங்கம் உக்ரைனுக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.
ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐசுஐளு-வு அமைப்பு மிகவும் நவீன ஜேர்மனியிடம் இருப்பதாகவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு முழு நகரத்தையும் பாதுகாக்க உக்ரைனுக்கு இது உதவும் என்றும் கூறினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பைடனின் அறிவிப்பு ஒரு மூன்றாவது நாடு மோதலுக்கு இழுக்கப்படும் அபாயத்தை அதிகரித்தது என தெரிவித்தார்.