நாட்டில் அடுத்த மூன்று வாரங்களுக்கு எரிவாயு- எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பொது மக்கள் இவற்றை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு தற்போது முகம்கொடுக்கும் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதிலிருந்து மீற வழமையான செயற்பாடுகளில் இருந்து நாம் புதுமையாக சிந்திக்க வேண்டும்.
இதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம். பொருளாதாரத்தை முன்னெற்ற வேண்டும். ஆனால் இதனால் மட்டும் நாட்டை ஸ்தீரப்படுத்த முடியாது.
இதனை இரண்டு- மூன்று நாட்களில் செய்து முடிக்கவும் முடியாது. எரிபொருளுக்காக 550 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது.
ஆனால் உலகலாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள நெறுக்கடியால் இவ்வருட இறுதியில் 40 வீதத்தால் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
40 மில்லியன் டொலர் எரிவாயுவுக்காகத் தேவைப்படுகிறது.
அடுத்த 3 வாரங்களுக்கு எரிபொருள்- எரிவாயுவுக்காக நாம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படலாம்.
எனவே, அனைத்தையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நாம் மக்களுக்கு கேட்டுக் கொள்கிறோம். அநாவசியப் பயணங்களை தவிர்க்கவும். எரிவாயு- எரிபொருட்களை பதுக்க வேண்டாம்.
3 வாரங்களுக்குப் பின்னர் இவற்றை சிக்கலின்றி பகிர்ந்தளிக்க நாம் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம்”- எனத் தெரிவித்தார்.