நாட்டில் இன்று முதல் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அமைச்சர், மூன்று நாட்கள் பகலிலும் மூன்று நாட்கள் இரவிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, பகலில் ஒரு பகுதியில் மூன்று நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் இரவு 5 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காலப்பகுதியில் மின்வெட்டு மூலம் நாளொன்றுக்கு 400 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் விலையை திருத்தியமைத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.