நாட்டில் இன்று (புதன்கிழமை) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாதென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் இன்று விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.