இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரினால் அவரது பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக இருக்கும் தம்மிக்க பெரேரா, வர்த்தக தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (09) தனது பதவியை இராஜினாமா செய்த வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் செல்லவுள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ள தம்மிக்க பெரேராவுக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்படும் என்றும் ஆனால் இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இலாகா பொருளாதார முகாமைத்துவம் அல்லது கைத்தொழில் அபிவிருத்திக்கு பொருத்தமானதாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.